ஜெயலலிதா சிலைக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. மரியாதை
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டயதையடுத்து தர்மபுரியில் ஜெயலலிதா சிலைக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கட்சியின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று தர்மபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கட்சி அலுவலகம் வந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொண்ணுவேல், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் செல்விதிருப்பதி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, மதிவாணன், வேலுமணி, செந்தில்குமார், மகாலிங்கம், செல்வம், செல்வராஜ், விஸ்வநாதன், பசுபதி, சேகர், கோபால், தனபால், முருகன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.