ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாளை தீர்மானம்


ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாளை தீர்மானம்
x
தினத்தந்தி 13 Feb 2024 8:28 PM IST (Updated: 13 Feb 2024 9:36 PM IST)
t-max-icont-min-icon

`ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. நாளை, நடைபெற உள்ள சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிய உள்ளார் என்று தெரிகிறது.

அதன்படி, 2026-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானமும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று மற்றொரு தீர்மானத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். இந்த தீர்மானங்களின் மீது எம்.எல்.ஏக்கள் விவாதித்து அதன்பின்னர், அவை நிறைவேற்றப்பட உள்ளன.


Next Story