தென்மலை அணையில் சகதியில் சிக்கிய காட்டெருமை மீட்பு
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தென்மலை அணையில் உள்ள சகதியில் சிக்கிய காட்டெருமை மீட்கப்பட்டது.
தென்காசி
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கேரள மாநிலம் ஆரியங்காவு அருகே தென்மலை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு வனப்பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று தண்ணீர் தேடி வந்தது. ஆனால் அணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதுடன் சகதியாக கிடக்கிறது. அந்த சகதியில் காட்டெருமை சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தென்மலை வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு காட்டெருமை மீட்கப்பட்டு, அங்குள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
Related Tags :
Next Story