கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்கப்பட்டார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கிணறு தூர்வாரும் பணி நேற்று காலை நடந்தது. இதில் பரங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான அற்புதம் (வயது 52) தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த கமலை கல்லில் நின்று கிணற்றை எட்டி பார்த்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கல் உடைந்ததால் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி அற்புதத்தை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story