ஒமன் நாட்டிற்கு கூலி வேலைக்குச் சென்று சித்ரவதைக்கு ஆளான 13 தமிழர்கள் மீட்பு


ஒமன் நாட்டிற்கு கூலி வேலைக்குச் சென்று சித்ரவதைக்கு ஆளான 13 தமிழர்கள் மீட்பு
x

அயலக தமிழர் நல ஆணையம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஓமனில் இருந்து மீட்கப்பட்டனர்.

சென்னை,

ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 நபர்கள் தனியார் ஏஜெண்ட்டுகள் மூலம் கடந்த ஆண்டு ஓமன் நாட்டிற்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு முறையான வேலையும், ஊதியமும், உணவும் வழங்காமல் தனி அறையில் வைத்து துன்புறுத்தியதாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை மீட்கக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்த நிலையில், அயலக தமிழர் நல ஆணையம் மூலம் 13 தமிழர்களும் மீட்கப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலத்துறை அதிகாரிகள், 13 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story