ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை


ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
x

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர்

ஆலங்குளம்

ஆலங்குளத்தை சுற்றி எதிர்கோட்டை, உப்புபட்டி, குண்டாயிருப்பு, மாதாங்கோவில்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, புளியடிபட்டி, கோபாலபுரம், லட்சுமியாபுரம், கீழாண்மறைநாடு, குறுஞ்செவல், கண்மாய்பட்டி, சீவலப்பேரி, கரிசல்குளம், மேட்டூர் உள்பட 25 கிராமங்கள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. ஆதலால் இப்பகுதி மக்கள் தாயில்பட்டி, ஆர்.ரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே ஆலங்குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.


Next Story