வேகத்தடை அமைக்க கோரிக்கை


வேகத்தடை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அலங்கார வளைவு முன்பு மானாமதுரை, காரைக்குடி செல்லும் சாலை இணைப்பு சாலை, இளையான்குடி-காரைக்குடி சாலை, இளையான்குடி-சிவகங்கை சாலை இணைந்த நெடுஞ்சாலை உள்ளது. கோவிலின் அலங்கார வளைவின் முன்பாக செல்லும் சாலைகள் அகலமாக உள்ள காரணத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டார கிராமத்தினர் அந்த இடத்தில் பஸ் நிறுத்தமாக அமைந்து பொதுமக்களுக்கு பயனளிக்கின்றது. இந்நிலையில் அலங்கார வளைவு முன்பாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிக அளவில் நடைபெறும் இடமாக உள்ளது.

எனவே, நெடுஞ்சாலை துறையினர் அலங்கார வளைவு முன்பும், சிறிது தூரம் தள்ளி என 2 வேகத்தடைகளை அமைத்து விபத்துகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேகத்தடை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகமும் ஒத்துழைக்க வேண்டும். விபத்து நடைபெறும் இடத்தை கண்டறிந்து வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story