தரைமட்ட பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ஆலங்குளம் அருகே தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைமட்ட பாலம்
ஆலங்குளம், சுண்டங்குளம் கிராமங்களுக்கு இடையே தரைமட்ட பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலம் வழியாக தான் ராஜபாளையம், சிவகாசி நகரங்களில் இருந்து வரும் பஸ்கள், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, செவல்பட்டி வழியாக கல்லூரி பஸ்கள் சென்று வருகின்றது.
இதேபோல் இந்த வழியாக சுண்டங்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, ஆவுடையாபுரம், திருவேங்கிடம் வரை பஸ்கள செல்கின்றன.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். அதேபோல பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் இந்த வழியாக தான் சைக்கிளில் சென்று வருகின்றனர். இந்த பாலம் வழியாக எண்ணற்ற பேர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த பாலத்திற்கு கீழ் வைப்பாறு செல்கிறது. மழை காலங்களில் தரைமட்ட பாலத்தில் அதிகமான தண்ணீர் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே தரைமட்ட பாலத்தை மேல்மட்ட பாலமாக கட்டி தர வேண்டும். சேதமடைந்துள்ள தரைமட்ட பாலத்தையும், சாலையையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.