கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அய்யனார் நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதோடு குப்பைகளும் கொட்டப்பட்டு வருகின்றது. கருவேல மரங்களும் கால்வாயின் பல இடங்களை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. மேலும் இங்கு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் வெளியேறி செல்லும் வகையில் சீரமைக்கவும், கழிவுநீர் கால்வாயில் உள்ள சேதமடைந்த ஓடை பாலங்களையும் சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story