வாரத்தில் 3 நாட்கள் இயக்க கோரிக்கை
நெல்லை-மேட்டு்ப்பாளையம் ரெயிலை வாரத்தில் 3 நாட்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
நெல்லை-மேட்டு்ப்பாளையம் ரெயிலை வாரத்தில் 3 நாட்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு ரெயில்
நெல்லையில் இருந்து தென்காசி, ராஜாபளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமைகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு சிவகாசி வழியாக நெல்லை செல்கிறது. இதில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ரெயில்வே நிர்வாகத்துக்கும் எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடும்பத்துடன் ஊட்டி செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
பயணிகளுக்கு பெரும் உதவி
எனவே தற்போது வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலை வாரத்திற்கு 3 நாட்கள் நெல்லையில் இருந்தும், 3 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்தம் இயக்கினால் பயணிகள் பெரும் உதவியாக இருக்கும்.
இதுகுறித்து பயணிகள் சார்பில் திருத்தங்கல் பகுதி சமூக ஆர்வலர் மைக்கேல், ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.