கார் டிரைவர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரிக்கை
சவுதி அரேபியாவில் விபத்தில் இறந்த கார் டிரைவர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் முருகன் (வயது 42). இவருடைய மனைவி முத்துக்கனி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முருகன் சவுதி அரேபியாவில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த சாலை விபத்தில் முருகன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் அவருடைய மனைவிக்கும், குடும்பத்திற்கும் தெரியவந்தது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் சவுதி அரேபியால் இறந்த முருகனின் உடலை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story