22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்
22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் விரைவில் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் 22 சதவீதம் ஈரப்படம் உள்ள நெல்லைக் கூட கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story