சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
சாத்தூர்,
சாத்தூர் மதுரை பஸ் ஸ்டாப் அருகே பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதிலும் சுகாதார வளாகத்தின் நுழைவு வாயிலை அடைத்துள்ளனர். பொதுமக்கள் சுகாதார வளாகம் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.. எனவே இப்பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story