வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்தது.
புதுக்கோட்டை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதியழகன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கவிவர்மன் மற்றும் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வறட்சியினால் ஆவுடையார்கோவில் தாலுகாவில் 2,826 எக்டேர், மணமேல்குடி தாலுகாவில் 1786 எக்டேர், அறந்தாங்கி தாலுகாவில் 517 எக்டேர் அளவுக்கு நெற்பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story