செவிலியா்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரிக்கை
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பணி நியமனம்
எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டும் பணி நியமனம் வழங்கப்படாத நிலை உள்ளதால் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கோரியுள்ளனர்.
கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் பெற்றுள்ளனர். இந்தநிலையில் கடன் பிரச்சினையினால் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் நிலையில் நிதி நிறுவன முகவர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் சிக்கி உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கும், நிதி நிறுவன முகவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் மனநல மருத்துவர்களை கொண்டு உரிய ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத் ராஜா கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
பயனாளிகள் தேர்வு
சத்திரரெட்டியபட்டி அன்னை இந்திரா ஆதி திராவிடர் மகளிர் மேம்பாட்டு சங்க தலைவர் ஜெயபாண்டி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை மூலமாக பயனாளிகள் அனைவருக்கும் மகளிர்உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது. இதில் மகளிர் உரிமை தொகையை பெற தகுதியானவர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவும் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.