குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை
குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் யூனியன் ரோசல்பட்டி பஞ்சாயத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என மக்கள் புகார் கூறும் நிலை உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர்குழாய் இணைப்பு கொடுக்கப்படும் என்று கூறி சாலையை சேதப்படுத்தி குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் அப்பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இணைப்பு கொடுப்பதற்கு முன்பு தற்காலிகமாக வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story