பணி மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
பணி மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
சிவகங்கை
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் தமிழக கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் பதவி உயர்விற்கான தகுதி உடைய ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு ஜனவரி முதல் நாளினை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்த பட்டியல்கள் (promotion panel) வெளியிடப்பட்டு பணிமூப்பின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலை, மேல்நிலை தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு, மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் பதவி உயர்வினை பெறுவதற்கு தற்போது ஆசிரியர் பணியில் உள்ளோர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. 2003-க்கு பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் நியமனம் என்பது கிடையாது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வு என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே அரசு பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என்ற முடிவை அறிவிக்க வேண்டும். மேலும் பணிமூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்ற கொள்கை முடிவினை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் தமிழ்நாடு சங்கம் சார்பில் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.