ஊருணியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
ஊருணியை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை யூனியன் கட்டவிளாகம் கிராமத்தில் உள்ள நடுக் குடியிருப்பு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊருணி நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை ஊருணியில் சேமித்து வைக்க முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் உள்ள ஊருணியை தூர்வாரி நீர் வரத்து கால்களை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story