அனைத்து வகை ராட்டினங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்


அனைத்து வகை ராட்டினங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் சித்திரை திருவிழாவில் அனைத்து வகை ராட்டினங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மானாமதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் விழாவில் பங்கேற்பார்கள். தினசரி ஒவ்வொரு கிராம மக்கள் சார்பாகவும் மண்டகப்படி நடத்தப்பட்டு அந்தந்த மண்டகப்படியில் சுவாமியும் அம்மனும் எழுந்தருள்வார்கள். தினசரி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 10 நாள் திருவிழா முழுவதுமே வைகை ஆற்றில்தான் நடைபெறும். விழாவையொட்டி ஆற்றில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். மேலும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக ஜெயன்ட் வீல், டோரா டோரா, குட்டி ெரயில், பட்டர் பிளை, ராட்சத பலூன், ராட்டினங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம்பெறும். இந்நிலையில் இந்தாண்டு ஒருசில ராட்டினங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், தொட்டி ராட்டினங்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்களும், குழந்தைகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து வகை ராட்டினங்களையும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்று வீர அழகர் கோவிலில் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்க உள்ளது. ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றினுள் ராட்டினங்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story