செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா; கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா; கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு

குடியரசு தின விழா

செங்கல்பட்டு அரசு ஐ.டி.ஐ. மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் தலைமையிலான போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி அரசின் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) 5 பயனாளிகளுக்கு 60 ஆயிரம் மதிப்பிலான காசோலையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனர்களுக்கு இலவச சலவை பெட்டி ரு.9,742 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டது.

67 பயனாளிகளுக்கு

மேலும் 2 பேருக்கு தையல் எந்திரம் ரூ.11,958 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விபத்து நிவாரண தொகையாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சமும், இயற்கை மரணம் அடைந்த 4 பேருக்கு ரூ.68 ஆயிரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 9 பேருக்கு ரேஷன்கார்டு, தோட்டக்கலை துறை சார்பில் 2 பேருக்கு பழச்செடி தொகுப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரு. 80 லட்சத்து 13 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் சப்-கலெக்டர் சஞ்ஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சாந்தா செலின்மேரி, மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் செந்தில் குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story