பத்மஸ்ரீ டாக்டர்சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் குடியரசு தினவிழா


பத்மஸ்ரீ டாக்டர்சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் குடியரசு தினவிழா
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர்சிவந்திஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் மாணவ செவிலியர் சங்கம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வி தேசியக் கொடி ஏற்றி மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இனிப்பு வழங்கினார். துணை முதல்வர் பெண்ணரசி பேசினார். பின்னர் கல்லூரி முதல்வர் தேசிய உறுதிமொழி கூற ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியை மாணவ செவிலியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுமதி தொகுத்து வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் நேற்று முன்தினம் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் வாக்காளர் தின விழா நடந்தது. நிகழ்ச்சியில், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஹேமா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வி வாக்காளர் தினம் குறித்து பேசினார். பின்னர் வாக்காளர் தின உறுதிமொழியை கல்லூரி முதல்வர் கூற ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story