குடியரசு தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
திசையன்விளை பேரூராட்சியில் தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். துணைத்தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சுகாதார ஆய்வாளர் நவராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில், மருத்துவமனை சேர்மன் டாக்டர் அருணாச்சலம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிர்வாக இயக்குனர் டாக்டர் சுவர்ணலதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் மாதவன், பொது மேலாளர் மனோகர் ராம், மார்க்கெட்டிங் மேலாளர் முருகன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாங்குநேரி யூனியன் உன்னங்குளம் ஊராட்சியில் தலைவர் புனிதா பெருமாள் தேசிய கொடி ஏற்றினார். ஒன்றிய கவுன்சிலர் செந்தூர் பாண்டியன், ஊராட்சி துணைத்தலைவர் அந்தோணிராஜ், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமார், குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன் மற்றும் அலுவலர்கள், வக்கீல் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அம்பை நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் பரிசளிக்கப்பட்டது.
அம்பை யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் பரணி சேகர் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் ராஜம் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அம்பை கலைக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி இசக்கி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சவுந்தரராஜா தலைமையில், செயலர் தங்கபாண்டியன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் வேலையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவகுமார், தேசிய கொடியை ஏற்றினார். பேராசிரியர் தீபலட்சுமி சிறப்புரையாற்றினார். இறுதியாக அயீஷால் பீவி நன்றி கூறினார்.
அம்பை சுப்பிரமணியபுரம் பகுதியில் லவ்லி நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அம்பை நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் தேசிய கொடி ஏற்றினார். அம்பை கல்யாணி திரையரங்கம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஜலீல், துணைத்தலைவர் முகமது உசேன், அம்பை நகரத் தலைவர் நாசர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒற்றுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அம்பை எல்.ஐ.சி. அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கிளை மேலாளர் சுரேஷ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்த குடியரசு தின விழாவில் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் ஆசிரியர் சுந்தரகுமார், ஊராட்சி செயலர் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பை அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார். சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகசாமிநாதன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செங்குந்தர் சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.