குடியரசு தின விழா கொண்டாட்டம்
ஆறுமுகநேரி, தென்திருப்பேரை பகுதியில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
ஆறுமுகநேரி:
தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் குடியரசு தினவிழாவை முன்்னிட்டு யூனியன் தலைவர் ஜனகர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் யூனியன் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமையில் நிலைய கண்காணிப்பாளர் மீனா தேசிய கொடியேற்றினார். ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் சார்பில் ஸ்டேட் வங்கி அருகில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.டி.சண்முகம் தலைமையில் நகர தலைவர் ராஜாமணி, முன்னிலையில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் விஜயராஜா கொடியேற்றினார். நகர பா.ஜ.க. சார்பில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர தலைவர் முருகேச பாண்டியன் கொடியேற்றினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், தங்க கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் முன்னிலையில் நகரப்பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் கொடியேற்றினார். நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினம் நகரசபை அலுவலகத்தில் தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகமது தேசிய கொடியேற்றினார். துணைத்தலைவர் சுல்தான் லெப்பை, ஆணையாளர் குமார் சிங், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஓவர்சியர் ஆனந்தனா மற்றும் பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தைக்கா தெருவில் உள்ள புது பள்ளிவாசலில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் முகமது கிஜாப் கொடியேற்றினார். மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்தில் தலைவர் பி.சதீஷ்குமார் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். துணைத் தலைவர் பக்கீர் முகையதீன், கிராம நிர்வாக அதிகாரி ஜெய்லானி பீவி, பஞ்சாயத்து செயலாளர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் ஏ.கே. கமாலுதீன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். துணை தலைவர் மகேஸ்வரி முருகப்பெருமாள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சாகுபுரம் டி.சி.டபிள்யூ தொழிற்சாலையில் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து தொழிற்சாலையின் பாதுகாப்பு பணியாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்ச்சியில் தொழிற்சாலையின் உதவி தலைவர் சுரேஷ் மற்றும் உயர் அதிகாரிகள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலந்துகொண்டனர்.