ரூ.1.30 கோடி அச்சிட்டதாக தகவல் : ரூ.500 கள்ள நோட்டு வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்


ரூ.1.30 கோடி அச்சிட்டதாக தகவல் : ரூ.500 கள்ள நோட்டு வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்
x

500 ரூபாய் கள்ள நோட்டு வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

சென்னை

சென்னை,

சென்னையில் 500 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கை முதலில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் சுப்பிரமணியன், அச்சகஅதிபர் கார்த்திகேயன், சூளைமேட்டைச் சேர்ந்த வினோத்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் போலீஸ் விசாரணையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் அச்சிட்டு கொடுக்கப்பட்டதாக, அச்சக அதிபர் கார்த்திகேயன் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

மேலும் இந்த வழக்கில் சிலருக்கு தொடர்பு இருக்கலாம், என்று கருதப்படுகிறது. விசாரணையை மேலும் தீவிரப்படுத்திட, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்ற, நுங்கம்பாக்கம் போலீசார் சிபாரிசு செய்தனர்.

அந்த சிபாரிசை ஏற்று வழக்கு விசாரணையை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story