திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் சீரமைக்கும் பணி மும்முரம்


திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் சீரமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 20 July 2023 7:00 PM IST (Updated: 20 July 2023 7:00 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான ஆடி கிருத்திகை திருவிழா அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் காவடிகளுடன் லட்சகணக்காண பக்தர்கள் பங்கேற்று காவடிகள் செலுத்தி முருகப்பெருமானை வழிபாடுவார்கள் என்பதால் முருகன் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் மலைக்கோவில் வளாகத்தில் உள்ள உயர் மின் கோபுரங்களில் சேதமான மின்விளக்குகளை சீரமைக்கும் பணி கோவில் ஊழியர்கள் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story