நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது: பெசன்ட்நகர், திருவான்மியூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பழுது: பெசன்ட்நகர், திருவான்மியூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பெசன்ட்நகர், திருவான்மியூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை

இதுக்குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 'திடீர்' பழுது ஏற்பட்டதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு 21-ந்தேதி (நேற்று) இரவு 10 மணி முதல் 23-ந்தேதி (நாளை) காலை 10 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள மயிலாப்பூர், மந்தைவெளியை சேர்ந்தவர்கள் பகுதி-9 பொறியாளர் 8144930909, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர்கள் பகுதி-13 பொறியாளர் 8144930913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடியை சேர்ந்தவர்கள் பகுதி-14 பொறியாளர் 8144930914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பகுதி-15 பொறியாளரை 8144930915 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story