வாடகை கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


வாடகை கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

வாடகை கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

வாடகை கார் டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூரில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முகமதுயூசுப் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜாகிர்உசைன் கண்டன உரையாற்றினார்.

மாநில துணை பொதுச்செயலாளர் சபரிநாதன், மண்டல செயலாளர் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓலா, உபேர் செயலிகள் (ஆப்) வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும். சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை வணிக ரீதியாக இயக்க தடை செய்வது தொடர்பாக, அனைத்து ஆர்.டி.ஓ.க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வணிக வாகனங்களை ஓட்டுவதற்கு பேட்ஜ் உரிமம் கட்டாயமில்லை என்பதற்கான அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்த டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story