குற்றாலம், வால்பாறையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு


குற்றாலம், வால்பாறையில் புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
x

அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் 80-வது வாரியக் கூட்டம், இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் தலைவருமான சி.வி.கணேசன் தலைமையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:-

சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி, சென்னை, மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள ஓய்வு இல்லங்கள், புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்படுகிறது. வாரிய நலத்திட்டப் பயன்களை அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக தற்போதுள்ள ஊதிய உச்ச வரம்பு ரூ.25,000/-லிருந்து ரூ.35,000/- உயர்த்தப்படுகிறது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் 30,134 தொழிலாளர்களுக்கு 12.54 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் திருமண உதவித் தொகை 3264 பயனாளிகளுக்கு ரூ.4,27,75,000/- வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 3 ஆண்டுகளில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 902 வாரிசுதாரர்களுக்கு ரூ.2,87,85,000/-ம், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 241 வாரிசுதாரர்களுக்கு ரூ.2,85,02,000/- வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையானது 01.04.2023 முதல் ரூ.10,000/-லிருந்து ரூ.20,000/-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, இதனை மேலும் உயர்த்தி ரூ.20,000/-லிருந்து ரூ.25,000/-ஆக உயர்த்தப்படவுள்ளது என்று கூறினார். மேலும், இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story