சாலையில் இடையூறாக உள்ள மரங்களை அகற்றும் பணி
சாலையில் இடையூறாக உள்ள மரங்களை அகற்றும் பணி
பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுபடியும், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னியின் செல்வன், திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஆணையர் விஜயகுமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும், ஒன்றிய தலைவர் பாஸ்கர் மற்றும் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளே ஆதிரெங்கம் ஊராட்சியில் மின்கம்பங்களுக்கும், சாலைகளுக்கும் இடையூறாக உள்ள மரங்களை பொக்லின் எந்திரம் மூலம் ஊழியர்கள் வெட்டி அகற்றினர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் பார்வையிட்டார். மேலும் சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றும் பணியும் நடந்்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் கூறுகையில், பொதுமக்களுக்கு சொந்தமான மரங்கள் மின்கம்பிகளில் உரசுவதே அடிக்கடி மின்தடை ஏற்பட காரணம். எனவே பராமரிப்பு பணி நடக்கும் போது மின்வாரிய ஊழியர்களுக்கும், ஊராட்சி பணியாளர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். அப்போது துணை தலைவர் பொற்செல்வி செல்லபாண்டியன், ஊராட்சி செயலர் இளந்திரையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.