குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
விழுப்புரம்
விழுப்புரத்தில் இருந்து விக்கிரவாண்டி செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்துப்பிரிவு வாகனத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஜம்புலிங்கம். இவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் சம்பவ இடத்திற்கு சென்று ஏட்டு ஜம்புலிங்கத்திடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் அவரை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story