சைலோம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சைலோம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விரிவாக்க பணிக்காக சைலோம் பகுதி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கீழையூர் பெரியார் சிலையில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் சைலோம் பகுதி வரை மத்திய அரசின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் சுமார் ரூ.8 கோடி செலவில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி கீழையூர் பெரியார் சிலையில் இருந்து சைலோம் பகுதி வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நெடுஞ்சாலை துறையின் உதவி கோட்ட பொறியாளர் எபினேசர், உதவி பொறியாளர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளின் முன்புறமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story