சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 31 July 2023 8:58 PM IST (Updated: 1 Aug 2023 2:36 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில், சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள், ஆர்.எம்.காலனி 9-வது குறுக்குத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.

அப்பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்கு முன்பு சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டுகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது சில கடைக்காரர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர், அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.


Next Story