கோவில் குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்


கோவில் குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
x

கோவில் குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ஆயிரவள்ளி அம்மன் கோவில் அருகில் உள்ள குளம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நீராதாரமாக விளங்கிய இந்த குளத்தில் தாமரை பூ, இலை என வருட குத்தகைக்கு விடப்பட்டும், மீன்கள் வளர்க்கப்பட்டும் ஊராட்சியின் வருமானம் பெருக்கப்பட்டது.

தற்போது குளத்தை சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதோடு, குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது, எனவே அந்த குளத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக குன்னம் ஊராட்சி சார்பில் ஏரியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி நிர்வாகத்திற்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story