நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், நாகையில் இருந்து தஞ்சாவூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், நாகை-திருவாரூர் சாலையில் கீழ்வேளூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளன. அதைதொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் துண்டு பிரசுரம் வழங்கியது.

ஆனால் ஆக்கிரமிப்பை யாரும் அகற்றவில்லை என்பதால் நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர், போலீசாருடன் தேரடி, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லின் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சில கடைகாரர்கள் தாங்கள் ஆக்கிரமிப்பு செய்ததை தாங்களே அகற்றி கொண்டனர். மேலும் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் சில தினங்களுக்குள் முற்றிலுமாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story