திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ் நிறுத்தும் இடம் அருகே ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் கீதா, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பாளா்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் பொக்லைன் எந்திரம் மூலமும், துப்புரவு பணியாளர்கள் மூலமும் பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் சுமார் 62 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story