அறியாபிள்ளை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்


அறியாபிள்ளை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x

சீர்காழி அறியாபிள்ளை குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி நகரின் முக்கிய பகுதியில் அறியா பிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் 1.76 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த குளத்தை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.11 கோடி மதிப்பில் தூர்வாரி , கரைகள் பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது ஆனால் குளத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாக பணிகளை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி , இப்பகுதியை பார்வையிட்டார். அப்போது ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் ,சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், பொக்லின் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.. முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டது.


Next Story