கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.

வேலூர்

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் இரு கரையிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,500-க்கும் அதிகமான வீடுகளை நீர்வளத்துறையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டது. இந்தநிலையில் பாவோடும் தோப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் கால அவகாசம் கேட்டு வீடுகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு வந்த குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் சித்ராதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், நீர்வளத் துறையினர் ஆகியோர் வீடுகளை அகற்ற ஏற்கனவே கால அவகாசம் வழங்கி உள்ளதாகவும், உடனடியாக வீடுகளை காலிசெய்யுமாறும் அறிவுறுத்தி, வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் கண்ணீருடன் வீட்டில் இருந்த பொருட்களுடன் வேறு இடத்திற்கு சென்றனர்.


Next Story