மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி


மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே பனங்காட்டு தெரு இனாம் குணதலபாடி, எலுமிச்சை குடி, மேலத்தெரு, திருநகரி ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜயரெங்கன் கலந்துகொண்டு மழையால் பாதிக்கப்பட்ட 250 ேபருக்கு போர்வை, பிஸ்கட், பழம், உணவு, நிதி உதவி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் கட்சி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரகூப், நிர்வாகிகள் சிவா, யுவராஜ், ஆசிரியர் பிரபு, தமிழரசன், ராஜா, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story