முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவிட்டார்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர், ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முதல் போகத்திற்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட உள்ளது.


Next Story