மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு டெல்டா பாசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சம்பா பயிர்களை காக்க மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை இன்று (3-ந்தேதி) முதல் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெற வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதல் அமைச்சரின் உத்தரவின் படி, இன்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் 6,600 கன அடி வீதம் 2 டி.எம். சி வரை மேட்டூர் அணை மின் நிலையம் வழியாகவும் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாகவும் தண்ணீர் திறக்கபட்டது. மேட்டூர் அணையில் இருந்து 3 மாதங்களுக்கு பிறகு டெல்டா பாசனத்திற்காக மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story