சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு
சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சென்னை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி ஆகும். இதனுடைய மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி கொண்டதாகும். இந்த ஏரியில் நேற்று நிலவரப்படி 2,173 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி 674 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மதகுகள் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் புழல் ஏரி கால்வாய் வழியாக புழல் ஏரியை வந்தடைகிறது. புழல் ஏரியில் இருந்து தினந்தோறும் 159 கன அடி தண்ணீர் சென்னை குடிநீருக்காக வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story