புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்த உறவினர்கள்
ெகால்லங்கோடு அருகே புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் ெசய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு:
ெகால்லங்கோடு அருகே புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் ெசய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
விபத்தில் இறந்தார்
கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (வயது60). இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்து கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து உடலை அவரது தாய், தந்தையை அடக்கம் செய்துள்ள கல்லறை தோட்டம் அருகே அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர்.
இதற்கு இறந்தவரின் சகோதரர் கிறிஸ்டோபர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், குடும்பத்தினர் அனைவரும் இருந்ததால் அவரது எதிர்ப்பை யாரும் பொருட்படுத்தாமல் அடக்கம் செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இந்த நிலையில் அடக்கம் செய்து 18- நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் இறந்தவரின் உடலை, அவரது சகோதரர் கிறிஸ்டோபர் அவரது மனைவி ரீனா, உறவினர்கள் ராஜூ, சுரேஷ் உள்பட சிலர் தோண்டி எடுத்தனர். ெசாத்து விவகாரம் காரணமாக உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்த முயன்றதாக தெரிகிறது.
இதை பார்த்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி உடலை தேண்டி எடுத்து, இறந்தவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த இறந்தவரின் மனைவியும், மகனும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வந்து மாற்று இடத்தில் அடக்கம் செய்ய தோண்டப்பட்ட குண்டுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது, உடலை அடக்கம் செய்ய வந்த கிறிஸ்டோபர் அவர்களை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இறுதியில் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றி விட்டு அடக்கம் செய்தார்.
வீடியோ வைரல்
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சகோதரர் தரப்பினர் சமரசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனத்தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கிறிஸ்டோபர், ரீனா, ராஜூ, சுரேஷ் மற்றும் கண்டால் ெதரியும் சிலர் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடைேய உடலை தோண்டி எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.