செங்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்


செங்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்
x

தொழிலாளி விபத்தில் இறந்ததை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செங்கம்

தொழிலாளி விபத்தில் இறந்ததை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்தில் தொழிலாளி பலி

செங்கம் அடுத்த முன்னூர்மங்கலம் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 44), தொழிலாளி. இவர் இன்று மாலை வீட்டில் இருந்து செங்கம் - போளூர் சாலையில் புதுப்பாளையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். புதூர் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்ததாக கூறபடுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து சேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ெசங்கம் அரசு மருத்துவமனையில் கூறினர்.

சாலை மறியல்

இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து இறந்தவரின் உடலை செங்கம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்தவுடன் செங்கம் போலீசார் விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் செங்கம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

இல்லை என்றால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அரசின் அமரர் ஊர்தியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சுமார் 20 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story