மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் அமைக்க பதிவு சான்று
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் அமைக்க பதிவு சான்று
தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் பெரும்பாலானவை கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு சில அலுவலகங்கள் தற்போது வரை பிரிக்கப்படாமல் நாகையிலேயே செயல்படுகின்றன. கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் அமைக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் அமைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பதிவு சான்றினை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் முதன்மை அமைப்பாளர் ஞானவேலனிடம் மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் வழங்கினார். விரைவில் மயிலாடுதுறையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் அலுவலகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது துணைப்பதிவாளர் ராஜேந்திரன், துணைப்பதிவாளர் (பொது வினியோகம்), அண்ணாமலை, கூட்டுறவு சார் பதிவாளர் குணபாலன், மேலாளர் (பொறுப்பு) அமீருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.