திராவிட மாடலை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம்- மதுரையில், அமைச்சர் சேகர்பாபு பேட்டி


திராவிட மாடலை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம்- மதுரையில், அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

திராவிட மாடலை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என மதுரையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மதுரை


திராவிட மாடலை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என மதுரையில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்துக்கள் வழிபாடு

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பழனி கோவிலில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி என்று வைக்கப்பட்ட பலகை பற்றி எனக்கு தெரியாது. இந்துக்களின் வழிபாட்டு முறையை ஏற்று கொண்ட மற்ற மதத்தினரும், இந்து கோவிலில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்து கோவில் என்பது இந்துக்களின் அடையாளம். மற்ற மதத்தினர், இந்துமதத்தை ஏற்று கொண்டு வரும்போது தடை ஏதும் இல்லை. ஒரு சில மதத்தின் அடையாளத்தை சார்ந்து வரும்போது தான் பிரச்சினை எழுகிறது. திராவிட மாடலை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம்தான். அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என நினைக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன், தம்பி போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடைபெறவேண்டும். திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, கால அளவு இருப்பதால் அது குறித்த பணிகளை நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பது குறித்து, இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் அறிவித்துள்ளோம். அது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்வதற்கான பணிகள் நடக்கிறது. சாத்திய கூறு இருக்குமாயின் இந்த ஆண்டு அதற்கு உண்டான பணிகளை வேகப்படுத்தி பணிகளை தொடங்குகின்ற சூழ்நிலை உருவாக்குவோம். அர்ச்சகர்கள் லஞ்சம் கேட்பது குறித்து புகார்கள் வரப்பெற்றால் யார் அந்த தவறில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நிச்சயமாக துறை நடவடிக்கை எடுக்கும்.

ஏற்றுக்கொள்ள முடியாது

இந்த ஆட்சி வந்தபின்னர், 4000 ஏக்கருக்கு மேலாக இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு கோவில் நிலங்கள் மீட்டெடுத்து இருக்கிறோம். நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் வரப் பெற்றிருந்தால், வேறு எதுவும் நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டால் அதை மீட்டெடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாலும், அதை மீட்பதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும்..

நீதிமன்ற தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் அரசின் பயன்பாட்டிற்கு தேவை என்றால் வேறு இடங்கள் இல்லாத பட்சத்தில் அதை விற்கலாம் என்று தீர்ப்பு உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இதுகுறித்து விளக்கம் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story