ரீல்ஸ் மோகம்... பஸ்சை வழிமறித்து பள்ளி மாணவிகள் அட்டகாசம்


ரீல்ஸ் மோகம்... பஸ்சை வழிமறித்து பள்ளி மாணவிகள் அட்டகாசம்
x

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

திருச்சி,

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரது கையிலும் செல்போன்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி ஆபத்தான மற்றும் உயரமான இடங்களில் செல்பி எடுப்பது, பொது இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆடுவது, பாடுவது, மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது, மேலும் அவற்றை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அனைவரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் தொடர்ந்து சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வெளியிட்டு வருகிறார். அவர் பல்டி அடித்து சாகசத்தில் ஈடுபட்டதை அவரது நண்பர் வீடியோ எடுக்க, அதனை சமூக வலைதளங்களில் ரீல்சாக வெளியிட்டு வருகிறார்.

இது பொதுமக்களையும், கல்லூரி மாணவிகளையும் தொந்தரவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து கோட்டை போலீசார் சமூக வலைதளங்களில் உலா வரும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் வரும் வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோல் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ்சை 2 பள்ளி மாணவிகள் வழிமறித்து நிறுத்தி, பஸ்சில் ஏறுவது போல் ஏமாற்றி சைகை காட்டி அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனை அவர்களது நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இது போன்ற ரீல்ஸ் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story