காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்குமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரானது, பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படும். இந்த அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
அணையின் நீர்மட்டம் 87.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 233 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில் தண்ணீர் திறப்பு பல மடங்கு கூடுதலாக உள்ளதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.