சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 402 மனுக்களுக்கு தீர்வு
திருச்சி மாநகர போலீசார் சார்பில் நடைபெற்ற பொதுமக்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 402 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
திருச்சி மாநகர போலீசார் சார்பில் நடைபெற்ற பொதுமக்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 402 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
சிறப்பு முகாம்
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தமிழக முதல்-அமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தலைமை தாங்கினார்.
402 மனுக்களுக்கு தீர்வு
இந்த சிறப்பு முகாமில் 45 மனுக்களில், மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்தும், அதில் 26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மேல் விசாரணையில் உள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 523 மனுக்களில், 437 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்ட 173 மனுக்களில் 126 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த 653 மனுக்களில் 402 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கை
இதே போன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தமிழக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் பெறப்பட்ட "முதல்வரின் முகவரி" மனுக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையகம், வடக்கு மற்றும் தெற்கு, போலீஸ் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.