விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
தர்மபுரி
தர்மபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத்துறையினர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன பழைய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீன் கடைகளில் பொது மக்களுக்கு தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீன் விற்பனை நடைபெறும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தரமற்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வது ஆய்வின் போது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story