தாம்பரத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு


தாம்பரத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
x

தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த தாம்பரம் காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான 2.32 ஏக்கர் நிலத்தில் தனியார் ஒருவர் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலத்தை மீட்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து தாம்பரம் கோட்டாட்சியர் செல்வக்குமார், தாசில்தார் கவிதா ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, அரசு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் அரசு மதிப்பு ரூ.50 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இடம் தேடி வந்தது. தற்போது இந்த இடத்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைக்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆணை மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அளிக்கப்பட உள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story